செய்திகள்

‘அறிக்கை’ தாமதமாவதால் குற்றவாழிகள் தப்பிவிடலாம்: மன்னிப்புச் சபை எச்சரிக்கை

இறுதிப்போரில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிப்பதை தாமதப்படும் முடிவை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை எடுத்தால் அதன் காரணமாக குற்றம் புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பி செல்ல கூடும். அதற்கு இலங்கை இடமளிக்க கூடாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடுவதை ஆறு மாத காலத்துக்கு தாமதப்படுத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ள நிலையிலேயே மன்னிப்புச் சபை இவ்வாறு அறிவித்திருக்கின்றது. அறிக்கை தாமதமடைவது குற்றவாழிகள் தப்பிச் செல்வதற்கான வழியை ஏற்படுத்திவிடும் எனச் சுட்டிக்காட்டியுள்ள மன்னிப்புச் இந்த முடிவை எடுத்தமைக்காக மனித உரிமைகள் பேரவையை விமர்சித்துள்ளது.