செய்திகள்

அலரி மாளிகைப் பகுதியில் இராணுவம் குவிப்பு: வெறிச்சோடிய கொழும்பு நகர்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பின்னடைவை கண்டுள்ள நிலையில், அலரி மாளிகைப் பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்தவுடன் ஏற்கனவே வியாழன் மாலையில் இருந்தே சுமார் 800 வரையான பொலிஸார் அலரி மாளிகைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகத்  தொடங்கிய பின்னர், பெருமளவு இராணுவத்தினர் அலரி மாளிகைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கொழும்பு நகரின் வேறு சில பகுதிகளிலும், படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.