செய்திகள்

அலரி மாளிகை இராணுவச் சதி குறித்து பிரதம நீதியரசரிடம் விசாரணை

 

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்ததாக பொது அமைதி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தினத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சதி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பதிவான முறைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரின் கண்காணிப்பின் கீழ், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறினார்.