செய்திகள்

அல்ஜசீரா ஊடகவியலாளர்கள் தடுப்பு தொடர்பில் மீளவும் நீதிமன்ற

எகிப்தில் அல்ஜசீரா ஊடகவியலாளர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து மீள நீதிமன்ற விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு கய்ரோவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எகிப்தில் கடந்த ஒருவருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்ஜசீராவின் கனடா மற்றும்,எகிப்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் தொடர்பாகவே இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை அரைமணிநேரம் நடைபெற்ற நீதிமன்ற விசாரைணகளுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எகிப்திற்கும் கட்டாரிற்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே இந்த அறிவிப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மீள் விசாரணைகள் ஒரு மாத காலத்தில் ஆரம்பமாகும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.