செய்திகள்

அல்லாயில் கைக்குண்டுத் தாக்குதல்: வாக்களிப்பை குழப்பும் முயற்சி!

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகி சுறுசுறுப்பாக இடம்பெற்றுவரும் நிலையில், பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகாமையில் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அல்வாய் பாடசாலையில் அமைந்துள்ள வாக்குசாவடிக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டின் மீதே இனம் தெரியாத நபர்களால் இந்த கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் அச்சம் நிலவுவதால் அப்பகுதியில் தற்போது பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை.