செய்திகள்

‘அல்-கைதா தீவிரவாத அமைப்புடன் ஹக்கீமுக்கு தொடர்புண்டு’

ஆப்கானிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் அல் – கைதா தீவிரவாத அமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தொடர்பு உண்டு என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை அமைப்பின் பேச்சாளர் டிலந்த விதானகே இன்று கிருலப்பனையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

அண்மையில் நாட்டில் நடந்த முரண்பாட்டுக்கு பொதுபல சேனாவே என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு ஹக்கீம் அறிக்கை சமர்ப்பித்தார். உண்மையில் அது ஐ.நாவுக்கானது அல்ல.

இலங்கையில் பிரச்சினை இருக்கிறது என்று கூறி இஸ்லாமிய அமைப்புக்களை ஒன்று சேர்த்து தீவிரவாதத்தை வளர்ப்பதே அதன் திட்டம். ஹக்கீமின் கடிதம் தீவிரவாத அமைப்புக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் உள்ள மதரசாக்களில் தீவிரவாதம் தொடர்பான கல்வி போதிக்கப்படுகிறது அதனை ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தார்