செய்திகள்

அழிவுப்பாதையை நோக்கி பயணிக்கும் காங்., கட்சி : அருண் ஜெட்லி

காங்., கட்சியின் மேலிடத்தில் நிலவும் பிரச்னைகள் காரணமாக அக்கட்சி அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது எனவும், அக்கட்சியின் மூத்த தலைவர்களின் கருத்துகளுக்கு அங்கு மதிப்பில்லை எனவும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கூறியுள்ளதாவது: காங்., கட்சி ஒவ்வொரு மாநிலமாக தனது தலைவர்களை இழந்து வருகிறது. இதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்., கட்சி, புதிய நிலைப்பாடுகளை திடீரென முன்னெடுத்து வைத்து தொந்தரவு தருகின்றனர். இதுவே அவர்களுக்கு பெரும் பின்னடைவு. இரண்டாவது, காங்., மேலிடத்தில் நிலவும் பிரச்னைகள்காரணமாக அக்கட்சி அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்களின் கருத்துகளுக்கு யாரும் அங்கு மதிப்பளிப்பதில்லை. ஒரு குடும்பத்தின் கீழ் மட்டுமே அக்கட்சி உள்ளது.

பின்னடைவு : கேரளாவில் கோஷ்டிப்பூசல் காரணமாக காங்., மதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் அக்கட்சியை காண முடியவில்லை. அசாமில் காங்., மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து விட்டனர். மேற்கு வங்கத்தில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டில்லியில் வெறும் 8 சதவீத வாக்குகளை மட்டுமே அக்கட்சி கொண்டுள்ளது. பஞ்சாப், அருணாசலப் பிரதேசம், அசாம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அவர்களின் செல்வாக்கு சரிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

N5