செய்திகள்

அழுத்தங்கள் என்றால் என்வென்று எனக்கு தெரியாது – லசித் மலிங்க

லசித் மலிங்கா காலில் மேற்கொள்ளப்பட்ட சத்திரகிசிச்சைக் காயங்கள் ஆறாத நிலையிலேயே நியுசிலாந் வந்தார்.செப்டம்பரிற்கு பின்னர் அவர் முதல் தரபோட்டிகளில் ஓரு பந்துகூட வீசவில்லை.

றிப்பிட்டசத்திரகிசிச்சைக்கு முன்னரும் சிறிது காலம் அவர் சிறப்பாக விளையாடவில்லை, அவரது வேகம் குறைந்திருந்தது,பந்துவீச்சில் கட்டுப்பாடு காணப்படவில்லை.

இவற்றின் காரணமாக அவர் உலககிண்ணப்போட்டிகளில் சிறப்பாக விளையாட மாட்டார் என நீங்கள் கருதலாம்.  எனினும் அவர் முக்கிய போட்டிகளில் சாதிப்பவர் என்ற பெயரை பெற்றவர்.ஓவ்வொரு முக்கிய போட்டிகளிலும் அவர் புத்துயுர் பெற்றுள்ளார்.யோக்கர்கள் மிகவேகமாக வந்து விழத்தொடங்கும்,விக்கெட்கள் சரியும்,ஹட்ரிக்குகள் சாதரண விடயமாக மாறும் துடுப்பாட்ட வீரர்கள் கால்விரல்கள் காயம்படும் சனிக்கிழமை இங்கிலாந்து அணியின் கரிபலன்ஸ் தான் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் இறுதி ஓவர்களில் அற்புதமாக பந்து வீசக்கூடியவர், ஆபத்தானவர் மலிங்க என்றார்.

நியுசிலாந்தில் இலங்கை அணியின் அதிஷ்டத்தை மாற்ற வேண்டிய நிலையிலுள்ள மலிங்க தன்மீது அதிக எதிர்பார்ப்பு சுமத்தப்பட்ட நிலையில் தான் விளையாடுவது ஒன்றும் புதிய விடயமல்ல என குறிப்பிட்டார்.

அழுத்தங்கள் என்றால் என்னவென்பது எனக்கு தெரியாது, நான் எபபோதும் அழுத்தமான சூழ்நிலைகளின் கீழ் விளையாடுபவன்,நான் சுமைகளற்ற மனோநிலையில், சிறப்பாக விளையாட விரும்புகிறேன்.  எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆடுகளம் எப்படியிருக்கும் என நான் அதிகம் அலட்டிக்கொண்டதில்லை. நியுசிலாந்தில் பந்துகள் உயரஎழும்பும் என எனக்கு தெரியும், எனினும் நான் எனது திறமையை நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

நீண்ட கால முழங்கால் காயம் சத்திரசிகிச்சையளவிற்கு சென்றதனாலேயே அவர் நீண்டகாலமாக ஓய்விலிருக்கவேண்டிய நிலையேற்பட்டது.ஜனவரி முதல் மெல்ல மெல்ல அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஒவ்வொரு அடியும் வலி நிரம்பியது என தெரிவிக்கும் மலிங்க தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாவேயிற்கு எதிரான பயிற்சி ஆட்டங்களுக்கும், நியுசிலாந்துடனான முதராவது போட்டிக்கும் தான் முழுமையாக தயாராகிவிடுவேன் என குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக நான் பழையமாதிரி பந்துவீசுகிறேன், ஆனால் எனது வேகம் குறித்து மாத்திரம் தெரியவில்லை,பயிற்சிபோட்டிகளின் போது அது குறித்து தெரியவரும் அவர் குறிப்பிட்டார்.