செய்திகள்

“அவன்கார்ட”; மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பாக 5 பேர் விரைவில் கைது?

“அவன்கார்ட்” மிதக்கும்; ஆயுத களஞ்சிய சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் அடங்களாக உயர்அதிகாரிகள் 5 பேரை உடனடியாக கைது செய்வதற்காக தேவையான ஆலோசனைகள் சட்டமா அதிபரினால் குற்ற விசாரணை திணைக்களத்துக்கு எதிர்வரும் நாட்;களில் வழங்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்களை ஆதாரம் காட்டி அரச தரப்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குற்ற விசாரணை திணைக்களத்தினால் அவன்கார்ட் சம்பவம் தொடர்பாக இது வரை 5 தடவைகள் விசாரணை நடத்தப்;பட்டுள்ளதுடன் இதன்போது இதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களாக இருக்கும்; 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் அவன்கார்ட் நிறுவன தலைவர் , பணிப்பாளர் , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் , ரக்னா லங்கா நிறுவன பணிப்பாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.