செய்திகள்

அவிசாவளை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 194 பேர் வைத்தியசாலையில் அனுமதி

அவிசாவளை சீதாவக்க தொழிற் பேட்டையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையென்றின் 194 ஊழியர்கள் உணவு விசமானதால் நோய் வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை அவர்கள் உணவு உட்கொண்ட பின்னர் மயக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகளுக்கு உட்பட்ட நிலையில் அவிசாவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அவிசாவளை பொலிஸார் மற்றும் சீதாவக்க சுகாதார பரிசோதகர் ஆகியோரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.