செய்திகள்

அவுஸ்திரெலியாவிலிருந்து திருப்பியனுப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரெலியாவுக்கு சென்றிருந்த இருவர்  அங்கிருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பட்டிருந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயதுடைய சிலாபம் மற்றும் உடப்பு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் 8 இலட்சம் ரூபா என்ற என்ற அடிப்படையில் சிலாபம் பகுதியை சேர்ந்த முகவர் ஒருவருக்கு பணத்தை கொடுத்து குழுவொன்றுடன் சட்ட விரோதமான முறையில் படகு மூலம் 2012 ஜூன் மாதத்தில் அவுஸ்திரெலியாவுக்கு சென்றிருந்த நிலையில் அங்குள்ள அதிகாரிகளினால் அவர்கள் இன்று திருப்பியனுப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக விமானம் மூலம் நாடு திரும்பிய இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.