செய்திகள்

அவுஸ்திரேலியாவிற்கு சவால் விடும் திறன் இங்கிலாந்திடமுள்ளதா?

உலககிண்ணத்தின் முதலாவது நாள் போட்டியில் கிரிக்கெட் உலகின் இரு நிரந்தர பகையாளிகள்அவுஸ்திரேலியா -இங்கிலாந்து மோதிக்கொள்வதை காண்பதற்கு மெல்பேர்னில் 90.000 பேர் திரள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இரு அணிகளும் சில வாரங்களுக்குமுன்னர் சந்தித்த மூன்று போட்டிகளிலும் அவுஸ்திரேலியா இலகுவான வெற்றியை பெற்றுள்ளதால் அந்த அணி குறித்த நம்பிக்கைகளே அதிகமாக காணப்படுகின்றன.
இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதி 12 போட்டிகளில் 11 இல் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது.
அவர்களிடம் அற்புதமான துடுப்பாட்ட வரிசை காணப்படுகின்றது , 10 வது வீரது மிட்ச்செல் ஸ்டார்க்கின் அதி கூடிய ஓட்டம் 99 என்பது அவர்களுது துடுப்பாட்ட வரிசையின் பலத்தை புலப்படுத்தும்,
அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சை எடுத்துக்கொண்டால் உலககோப்பையில் விளையாடும் வேகப்பந்துவீச்சாளர்களில் வேகமான மூவர் அணியில் உள்ளனர், ஜோன்சன், ஸ்டார்க், கமின்ஸ் .
எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு சுமையாக அமையலாம். எனினும் ஓருநாள் போட்டி தரவரிசையில் முதலாவதாக உள்ள அணியது. அவர்களது துடுப்பாட்ட வீரர்களால் எந்த அணி பந்துவீச்சையும் சிதறடக்க கூடியவர்கள்.அவர்களுக்கு பழக்கமான ஆடுகளங்களில் சொந்தமண்ணில் அவர்கள் ஆடுகின்றனர்.
இங்கிலாந்திற்கு எதிர்பார்ப்பு சுமைகளில்லை, சமீபத்தில் அணிதலைவரை மாற்றிய அணியது,கடந்த ஓரு வருட காலத்திற்கும் மேல் எந்த ஓரு நாள் தொடரையும் வெல்லவில்லை,1992 இற்கு பின்னர் உலககோப்பையின் அiயிறுதியாட்டத்திற்கு அவர்கள் தெரிவாகவில்லை.என்ற நிலையிலேயே அவர்கள் இந்த போட்டிக்கு செல்கின்றனர்.