செய்திகள்

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் கைது

முதலாம் உலக யுத்தத்தின் நிறைவை குறிக்குமுகமாக அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடைபெறவிருந்த நிகழ்வின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு ஐஎஸ் ஆதரவாளர்கள் வகுத்திருந்த திட்டத்தை முறியடித்துள்ளதாக ஆஸி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெல்பேர்னில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த அன்ஜாக் ஞாபகார்த்த நிகழ்வின் மீது தாக்குதலை மேற்கொள்ள 5 பேர் திட்டமிட்டிருந்ததாகவும் அவர்களை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ் அமைப்பினால் உணர்வூட்டப்பட்டவர்களே இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இவர்களில் இருவர் 18 வயது இளைஞர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கூரான ஆயுதங்களை பயன்படுத்தியே இவர்கள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.இவர்கள் கடந்த செப்டம்பரில் பொலிஸார் மீது கத்தியால் குத்த முயன்ற வேளை துப்பாக்கியால் சுடப்பட்ட இளைஞனின் சகாக்ககள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே குறிப்பிட்ட அன்சாக் நிகழ்வில் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகௌ;ளுமாறு பிரதமர் டொனி அபொட் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.