செய்திகள்

அவுஸ்திரேலிய ஓபன்: இறுதி சுற்றுக்குள் ஷரபோவா, செரீனா, முர்ரே

மெல்போர்னில்  நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் டெனிஸ் போட்டியில் மகளிருக்கான பிரிவில் இன்றைய தினம் அமெரிக்க வீராங்கணையான செரீனா வில்லியம் (33வயது) அவரை எதிர்த்து விளையாடிய அதே நாட்டு வீராங்கணையான மெடிசன் கீஸ்ஸை (19வயது) 7-6 (7-5), 6-2 என்னும் செட்  கணக்கில் வென்று இறுதி சுற்றுக்குள் நுழைந்து கொண்டார்.

sharapovaமற்றொரு போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த மரியோ ஷரபோவா(27வயது) 6-3, 6-2 என்னும் நேர் செட் கணக்கில் அவரை எதிர்த்து விளையாடிய அதே நாட்டு வீராங்கணையான எகடெரினா மகரோவாவை (26வயது) வென்று இறுதி சுற்றுக்குள் நுழைந்து கொண்டார். இதன் அடிப்படையில் எதிர்வரும் சனிக்கிழமை (2ம் திகதி) நடைபெறவுள்ள பெண்களுக்கான அவுஸ்திரேலிய ஓபன் இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கணையான செரீனா வில்லியமும் ரஷ்யாவைச் சேர்ந்த மரியோ ஷரபோவாவும் மோதவுள்ளனர். கடந்த 10 வருடங்களில் ஷரபோவா 15 போடிகளில் செரீனாவை எதிர்த்து விளையாடிய போதிலும் எந்தவொரு போட்டியிலும் வெற்றிபெற முடியவில்லை என்பது குறிபிடத்தக்கது.

murrayஆடவருக்கான போட்டியில்  இன்றைய தினம் பிரித்தானிய  வீரர் அன்டி முர்ரே (27வயது) 6-7 (6-8), 6-0, 6-3, 7-5 என்னும் செட் கணக்கில் அவரை எதிர்த்தாடிய  செச் வீரர் தோமஸ் பேர்டிச்சை (29வயது) வென்று இறுதி சுற்றுக்குள் நுழைந்து கொண்டார். இது இவர்  நுழையும் 4வது அவுஸ்திரேலிய ஓபன் இறுதி சுற்று போட்டி என்பது குறிபிடத்தக்கது.