செய்திகள்

அஸ்கிரிய பீடாதிபதி சிங்கப்பூரில் காலமானார்

அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் இன்று காலை காலமானார்.

சிங்கப்பூர், மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது 85ஆவது வயதில் இவர் காலமாகினார்.