செய்திகள்

ஆகட்ஸ்ட் 17 ஐ.தே.கவை தோற்கடித்து ஐ.ம.சு.கூ ஆட்சியை அமைப்போம் : மஹிந்த அணி தெரிவிப்பு

ஆகஸ்ட் 17ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்கடித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி அமைக்கப்படுவது உறுதியாகியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவினால் இன்று விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்ட பின்னர் அது தொடர்பாக மஹிந்த தரப்பினரால் நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது,

நேற்று இரவு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையே நடைபெற்ற சந்திப்பில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வேட்பு மனு வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக சுசில் பிரேமஜயந்ததெரிவித்துள்ளார். இதன்படி வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.இதன்படி ஆகஸ்ட் 17ம் திகதி தற்போதைய சிறுபான்மை ஆட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை தோற்கடித்து எமது ஆட்சியை நிலை நாட்டுவோம் என்பது உறுதியாகியுள்ளது. என தெரிவித்துள்ளார்.