செய்திகள்

ஆசனப்பகிர்வு குறித்து நாளை இறுதி முடிவு: கூட்டமைப்பு நாளை வவுனியாவில் கூடுகின்றது

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் தனித்துப் போட்­டி­யிடும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பங்­காளிக் கட்­சி­க­ளுக்­கி­டையில் ஆசனப் பங்­கீடு குறித்து இறுதி முடிவை எடுப்­ப­தற்­காக நாளைய தினம் வவு­னி­யாவில் கூட­வுள்­ளது.

முன்­ன­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்சித் தலை­வர்­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற கூட்­டத்­தின்­போது யாழ்ப்­பாணம், திரு­கோ­ண­மலை உள்­ளிட்ட தேர்தல் தொகு­தி­களில் ஆசனப் பங்­கீடு குறித்து இணக்கம் காணப்­பட்­டி­ருந்­தது.

எனினும் மட்­டக்­க­ளப்பு , வன்னி தேர்தல் தொகு­தி­களில் இணக்கம் எட்­டப்­ப­டாத நிலை நீடித்­தி­ருந்­தது. இதனால் ஆச­னப்­பங்­கீடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இறுதித் தீர்­மா­ன­மொன்றை அறி­வித்­தி­ருக்­க­வில்லை. இந்­நி­லை­யி­லேயே நாளைய தினம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் இடம்­பெ­ற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதன்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் மற்றும் பொதுத் தேர்தலில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள வியூகங்கள்குறித்து ஆராயப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.