செய்திகள்

ஆசன பங்கீடு தொடர்பில் நாளை கூடுகிறது கூட்டமைப்பு

அங்கத்துவ கட்சிகளுக்கான ஆசன பங்கீடு தொடர்பான இறுதி முடிவு எடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாளை வவுனியாவில் கூடி முடிவெடுக்கவுள்ளன.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கு ஆசனங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.
அங்கத்துவ கட்சிகளான தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுக்கு ஆசனங்களை பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இதில் வன்னி மற்றும் மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன பகிர்வு தொடர்பில் நாளை இறுதி முடி எட்டப்படும் என தெரியவருகிறது.