செய்திகள்

ஆசிரியரின் தாக்குதலில் மாணவன் படுகாயம்

மெராயா நகரத்தை அண்மித்துள்ள தோட்டப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் அதே பாடசாலை ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான 10 வயது மாணவன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும் இதுவரை லிந்துலை பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்துடன் நாம் தொடர்பினை ஏற்படுத்திய போது. முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.