செய்திகள்

ஆசிரியர்களால் வட மாகாண கல்வி அமைச்சரும் சில மாகாணசபை உறுப்பினர்களும் தடுத்துவைப்பு

வட மாகாண கல்வி அமைச்சினுள் முடக்கப்பட்டுள்ள கல்வி அமைச்சர் உட்பட மாணாக சபை உறுப்பினர்கள்

வட மாகாண கல்வி அமைச்சர் உட்பட மாணாக சபை உறுப்பினர்கள் சிலர் வட மாகாண கல்வி அமைச்சுக்குள் முடக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

இது தொடர்பாக ஆசிரியாகளால் கல்வி அமைச்சினுள் சிறை வைக்கப்பட்டுள்ள வட மாகாண சபை உறுப்பினர் ஆர். இந்திரராஜாவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் தெரிவித்தாவது:

வட மாகாண கல்வி வலயங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக ஆசிரியர்கள் சிலர் கல்வி அமைச்சுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் கல்வி அமைச்சர் குருகுலராஜா உட்பட வட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளை வெளியில் செல்லவிடாது தடுத்துள்ளனர்.

இவ் ஆண்டு வடக்கில் உள்ள கல்வி வலயங்களில் 5 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய ஆசிரியர்களை இடாற்றம் செய்வதற்காக பெயர் விபரங்களை அனுப்புமாறு வட மாகாண கல்வி அமைச்சு வலயக்கல்விப்பணிப்பாளாகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதன் நிமித்தம் வட மாகாண கல்வி வலயங்களினால் 259 போரின் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் அதனை பரிசீலித்ததன் அடிப்படையில் 148 பேருக்கு 5 வருடங்கள் ஒரு வலயத்தில் பணியாற்றியிரந்ததன் அடிப்படையில் அவர்களை இடமாற்றம் செய்ய தீர்மானித்திருந்தது.

எனினும் இதனால் அதிருப்தி கொண்ட ஆசிரியர்கள் கல்வி அமைச்சுக்கு முன்னாள் கூடி கல்வி வலயங்களினால் அனுப்பப்பட்ட அனைவரையும் இடமாற்றம் செய்யுமாறும் அவர்களது பெயர் பட்டியலை தம்மிடம் தருமாறும் கோரியுள்ளனர்.

எனினும் அரச திட்டத்தின் அடிப்படையில் இடாற்றம் செய்யப்படுபவர்களின் பெயர்ப் பட்டியல் வலயங்களுக்கே அனுப்பப்படவேண்டும் என்றும் அங்கு அதனை பார்வையிடலாம் என்றும் , இதனை நாளை 3 மணிக்கு முன்னர் நடைமுறைப்படுத்துவதாகவும் ஆசிரியர்களுக்கு தெரிவத்தபோதிலும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.