செய்திகள்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக ஆராய நால்வர் அடங்கிய குழு நியமனம்!

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் பற்றி மேலெழுந்துள்ள நிலைமைகள் தொடர்பாக அமைச்சரவையில் விரிவாகக் கலந்துரையாடபட்டுள்ளது

அதற்கமைய, இவ்விடயத்திற்குரிய அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு இப்பிரச்சினை தொடர்பாக மேலதிக விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டலஸ் அலகப்பெரும, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர, பிரசன்ன ரணதுங்க ஆகிய அமைச்சர்களை உள்ளடக்கியதாக அந்த  அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

-(3)