செய்திகள்

ஆசிரியர்களை அச்சுறுத்தினால் கடுமையான நடவடிக்கை

பாடசாலை செல்லும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

எனினும், ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடாது சேவைக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கண்டி – பொல்கொல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

-(3)