செய்திகள்

ஆசிரியர் நியமனங்கள் ரத்து

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் டிப்ளோமா பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு வெளிமாகாணத்துக்கு வழங்கிய அனைத்து நியமனங்களும் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஆசிரியர்களை உடனடியாக அவரவர் மாவட்டத்துக்கு மாற்றவேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று ஸ்ரீ.மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் இன்று காலை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியதன் பயனாக உடனடியாக அமுல் படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ள அனைவருக்கும் அவரவர் மாவட்டத்துக்கு நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்றவர்கள் உடனடியாக உங்கள் விபரத்தை (நியமனக் கடிதப் பிரதி) முதலமைச்சின் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். முதலமைச்சரின் மாவட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உங்கள் விபரங்களை கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.