செய்திகள்

ஆச்சரியத்தை அளித்துள்ள எஸ்பி திசநாயாக்கவின் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக போட்டியிட்ட வேளை அவரையும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் தகாதவார்த்தைகளால் நிந்தித்த முன்னாள் உயர்கல்வியமைச்சர் எஸ்பி.திசநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
நேற்று மாலை ஜனாதிபதியின் தலைமையில் கட்சியின்மத்திய குழு கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் தற்போதைய ஜனாதிபதி கட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது கூட்டமிது.
ஜனாதிபதியின் முழுமையான ஆதரவுடனேயே எஸ்பியின் நியமனம்இடம்பெற்றுள்ளது.