செய்திகள்

ஆடுகளங்களின் தன்மை காரணமாக இந்தியாவிற்கான வெற்றி வாய்ப்புகள் குறைவு சித்தாத் மொங்கியா-கிரிக்கின்வோ

கடந்த முறை உலகிண்ணத்தை வென்ற அணி என்ற பெயருடனும்,இரண்டு தடவைகளுக்கு மேல் உலககிண்ணத்தை கைப்பற்றிய அணி என்ற பெருமையுடனும் இந்தியா 2015 உலககிண்ண போட்டிக்கு செல்கின்றது.
கடந்த வருடம் இடம்பெற்ற டி20 போட்டியின் இறுதியாட்டத்தில் அவர்கள் இலங்கையை தோற்கடித்திருந்தால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உலகிண் முக்கிய போட்டிகளை வென்ற அணி என்ற பெருமையும் அவர்களுக்கு கிடைத்திருக்கும்,ஓரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் குறிப்பிடத்தக்க காலம் அவர்கள் முன்னிலையில் இருந்திருக்கின்றனர்.
எனினும் இம்முறை உலககிண்ணத்தை வெல்லப்போகின்ற அணிகளில் ஒன்று என இந்திய அணியை தெரிவிக்க முடியாது.
இதற்கு முக்கிய காரணமாக காணப்படுவது போட்டி இடம்பெறும்மைதானங்களே அவுஸ்திரேலியாவிலும், நியுசிலாந்திலும் இந்தியா இறுதியாக விளையாடிய ஒருநாள் போட்டிகளில் மிகமோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாத சூழ்நிலைகளில் அணியின் பலம் பலமடங்காக குறைந்துவிடுவது வழமை.இம்முறை உலககிண்ணபோட்டிகள் இடம்பெறும் மைதானங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமற்றவைகள் என்பது முக்கியமானது.
இந்தியாவிற்கு பாதகமான இன்னொரு விடயமும் காணப்படுகின்றது. நீண்ட நாட்களாக ஓய்வின்றி அந்த அணி விளையாடுவதே அந்த விடயம்.பல வீரர்கள் 100 நாட்களுக்கு மேலாக வெளிநாடுகளில் தங்கியுள்ளனர்.
முதல்சுற்றில் இந்தியா போன்ற அணிவெளியேறுவதற்கான வாய்ப்பகள் குறைவு,அணிதலைவர் டோனியின் கீழ் நிதானமும் அந்த அணிக்கு பிரச்சினையில்லாத விடயம்.
ஆடுகளங்கள்,மைதானங்கள் இந்தியாவிற்கு பாதகமாக காணப்பட்டாலும் இந்தியாவிற்கான வெற்றிவாய்ப்பை அவ்வளவு எளிதில் நிராகரித்துவிடமுடியாது-
டோனி
அணியின் மூத்த உறுப்பினர், 2011 இல் விளையாடிய அணியில் எஞ்சியிருக்கும் ஒருவர்.
ஏனைய அணிகளால் நன்கு புரிந்துகொள்ளப்பட்டவர் என்றாலும், இன்னமும் சில ஆச்சரியங்களை கைவசம் வைத்திருக்கிறார்.அவரது தந்திரோபாயங்கள், களத்தடுப்பு வியூகங்கள் மற்றும் அவரது துடுப்பாட்டம் என்பவை எதிரணிக்கு சவாலாக அமையலாம்.மகேந்திர சிங் டோனி சிறந்த துடுப்பாட்ட வீரராக, அணித்தலைவராக,இம்முறை பிரகாசிக்காவிட்டால் இந்தியாவிற்கன வெற்றிவாய்ப்புகள் குறித்த கற்பனை செய்ய முடியாது.
விராட்கோலி
இவரது துடுப்பாட்டாமே அணியின் தலைவிதியை தீர்மானிக்கும்.
ஏனைய முக்கிய அணிகளுடன் ஒப்பிட்டால் இந்தியஅணியின் வேகப்பந்துவீச்சே பலவீனமானது.அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசாத பட்சத்தில் ஒவ்வொரு போட்டியிலும் துடுப்பாட்ட வீரர்கள் மேலதிக அழுத்தங்களுக்கு உள்ளாகலாம்.
இரண்டாவதாக துடுப்பபெடுத்தாடும் அணிக்கு சவாலான ஓட்ட எண்ணிக்கை எதுவென்பது நிச்சயமாக தெரியாததால் இந்திய இரண்டாவதாக துடுப்பெடுத்தாடுவது வழமை.
தங்களது பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பை அளிப்பதற்காக பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களை இந்தியா எதிர்பார்க்கலாம், இல்லாவிடில் இந்த தொடர்முழுவதும் இந்தியா பார்வையாளராகவே இருக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.
ஊகம்
உலகிண்ண போட்டிகளில் விளையாடும் முக்கிய அணிகளுக்கு முதலாவது சுற்று சவாலாக அமையாது என்பதால் அடுத்த மூன்று போட்டிகளே முக்கியமானவை.
அவுஸ்திரேலியா,நியுசிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளே அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.