செய்திகள்

ஆட்சி அமைக்கும் அரசாங்கித்தினை தெரிவு செய்யும் சக்தி மலையக மக்களுடைய வாக்கு பலத்திலேயே தங்கியுள்ளது

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசாங்கித்தினை தெரிவு செய்யும் சக்தி மலையக மக்களுடைய வாக்கு பலத்திலேயே தங்கியிருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 மேலும் தெரிவிக்கையில்…

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நல்லாட்சியை கொண்டு வருவதற்கு மலையக மக்களுடைய வாக்கு பலம் ஒரு தீர்மானிக்க கூடிய சக்தியாக இருந்துள்ளது.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் போது கூட புதிய பாராளுமன்றத்தில் எந்த தரப்பு செயற்படபோகும் என்பதை மலையக மக்களுடைய சக்தியிலேயே தங்கியுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர்.சந்திரசேகரன் இருந்த கால கட்டத்தில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு மலையகத்தில் தலைவர்.சந்திரசேகரனின் முழு பங்களிப்பே இருந்தன.

அதேபோன்று கடந்த தேர்தலின் போது கூட மலையக மக்கள் முன்னணி ஜக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கிய போது மலையக மக்கள் எந்த மாற்று கருத்து இல்லாமல் சிந்தித்து வாக்களித்ததை சுட்டிகாட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

இன்று இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழுவதற்கு நல்லாட்சி வழிசமைத்துள்ளது. இந்த நல்லாட்சியை ஏற்படுத்துவதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் அரும்பாடுபட்டுள்ளனர். ஆகவே எதிர்வரும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையில் வாழுகின்ற மலையகத்தமிழ் மக்களின் சக்திமிக்க அமைப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி திகழப்போகின்றது. அத்தோடு ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதியின் தேர்தல் காலத்தில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி அதை செயல்வடிவத்திலேயே காட்டி வருகின்றது.

200 வருடம் மலையகத்தில் நாட்டின் வருமானத்திற்கு முதுகெழும்பாக உழைத்த மலையக மக்களுக்கு வீட்டுப்பிரச்சினையை தீர்ப்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உன்னதமாக செயல்பட்டு வருகின்றார்.

அது மட்டுமில்லாமல் மலையக கல்வியில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக பல்வேறுப்பட்ட திட்டங்களை ஜக்கிய தேசிய கட்சியின் தற்போது ஆட்சியின் போது செய்து வருகின்றார்கள்.

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் நிச்சியமாக ஜக்கிய தேசிய கட்சி அதிகபடியான ஆசனங்களை பெற்று பாராளுமன்றத்தை அமைக்கும் என இவர் மேலும் தெரிவித்துள்ளார்.