செய்திகள்

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அகதிகளை நடுக்கடலில் நிறுத்த முடியாது போய்விடும் என்று அவுஸ்திரேலிய அரசு அச்சமாம்

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சட்டவிரோ புகலிடக்கோரிக்கையாளர்களை நடுக்கடலில் தடுத்து நிறுத்தும் கூட்டுதிட்டம் பாதிக்கப்படுமா என அச்சம் கொண்டுள்ள அவுஸ்திரேலியா இலங்கையின ஜனாதிபதி தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சிட்னிமோனிங் ஹெரல்ட் தெரிவித்துள்ளது.
2009 இல் பெருமளவான தமிழர்கள் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்டதை தொடர்ந்து பெருமளவானவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல முயன்றதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமடைந்தன,அபொட் மற்றும் தொழில்கட்சி அரசாங்கங்கள் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தியுள்ளன, கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் அவுஸ்திரேலிய இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டது.
எனினும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கைக்கு கேள்விகளின்றி ஆதரவு வழங்குவதை அபொட் அரசாங்கம் ஆதரவளிப்பதை நிறுத்தவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களின் படகுகளை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த முனைந்துள்ள அவுஸ்திரேலியா,உண்மையில் யுத்த குற்றவாளிகளுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்தியுள்ளது,இலங்கையின் அடுத்த அரசாங்கத்துடனான அவுஸ்திரேலியாவின் உறவுகள் மனித உரிமைகரிசனைகளை மையப்படுத்தியமாக அமையவேண்டும் என பில் லைன்ச் என்ற மனித உரிமை பணியாளர் தெரிவித்துள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது