செய்திகள்

ஆணைக்குழவின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான இறுதி நாள் அமர்வுகள்

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழவின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான இறுதி நாள் அமர்வுகள் இன்று 28-04-2016 நடைபெற்றுவருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் கடந்த திங்கட் கிழமை (25-04-2016) முதல் ஆரம்பமாகி மூன்றாம் நாளாக இன்று (28-04-2016) வரை நடைபெற்றுவருகின்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வரும் இவ் அமர்வில் இன்று பளைமற்றும் புனகரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 194 பேருக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.