செய்திகள்

ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் உள்ள பற்றைக்காட்டுக்குள் ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை ஓந்தாச்சிமடம் கடற்கரை பகுதியில் உள்ள பொதுமயானத்திற்கு அருகில் ஓடையினை அண்டியதாகவுள்ள பற்றைக்காட்டுக்குள்ளேயே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் அணிந்திருந்த ஆடைகளைக்கொண்டு சடலம் மகிழூர்,நாகபுரம் பகுதியை சேர்ந்த அரியக்குட்டி சிறிஸ்கந்தராஜா(54வயது)என்பவரது என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

குடந்த 07ஆம் திகதி வீட்டில் இருந்து சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

n10