செய்திகள்

ஆண் போல் நடித்து பெண்ணொருவரை திருமணம் செய்து 8 வருடங்களாக ஏமாற்றிவந்த பெண்ணொருவர் கைது

ஆண்போன்று உடலமைப்பை மாற்றி பெண்னொருவரை திருமணம் முடித்து 8 வருடங்களாக அவருடன் வாழ்க்கை நடத்தி வந்துள்ள பெண்ணொருவர் மாத்தரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொய்யாக ஆணொருவரின் பெயரில் வெலிகம பகுதியில் பெண்ணொருவரை திருமணம் முடித்து  8வருட காலமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ள நிலையில்  அவரின் நடத்தை தொடர்பாக மனைவியாக உள்ள பெண் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதை தொடர்ந்து ஆணைப்போன்று நடித்து வந்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதி  மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.