செய்திகள்

ஆந்திராவில் தமிழர்கள் கொலை வழக்கு: மதுரையில் விசாரணை

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக மதுரையில் உள்ள சில சாட்சிகளிடம் ஆந்திர சிறப்பு புலனாய்வு குழு வினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி, 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர சிறப்பு போலீஸார் கடந்த ஏப். 7-ம் தேதி சுட்டுக் கொன்றனர். அவர்களது உடலில் வெட்டுக்காயம் இருந்ததால் சிபிஐ விசாரணை கேட்டு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், சில சாட்சிகள் தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன் ஆஜராகி, ஆந்திர போலீஸார் தமிழர்களை பஸ்ஸில் இருந்து பிடித்துச் சென்றதை பார்த்ததாக வாக்குமூலம் அளித் தனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஆந்திர அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று மதுரை சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.