செய்திகள்

ஆன்டர்சன் – திரிமானே மோதல்

உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் இளம் துடுப்பாட்ட வீரர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை வைத்துள்ளனர்.இலங்கை அணி இங்கிலாந்திற்கு இறுதியாக சுற்றுப்பயணம் செய்த வேளை ஜேம்ஸ் ஆன்டர்சன் லகுறு திரிமானேயின் துடுப்பாட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தினார். ஆன்டர்சன் தும்மினாலே இவர் ஆட்டமிழந்து விடுவார் என்ற நிலை காணப்பட்டது.

186119

அந்த தொடரில் விளையாடும் போது திரிமானே இலகுவான ஒரு இலக்கல்ல,அவர் அதற்கு ஓரு மாதத்திற்கு முன்னர் தான் அணிக்கு ஆசியா கிண்ணத்தை வென்றுகொடுத்திருந்தார்.இருபதிற்கு இருபது உலககிண்ணப்போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியிருந்தார், அரையிறுதியாட்டத்தில் அவரது இனிங்சே இலங்கையை காப்பாற்றியது.

எனினும் ஆன்டர்சன் அந்த தொடரில் பந்துவீசிய விதத்தினால் திரிமானே பாதிக்கப்பட்டார். பின்னர் விராட்கோலிக்கும் இது இடம்பெற்றது.திரிமானேயின் தன்னம்பிக்கை குறைவடையத் தொடங்கியது.அந்த சுற்றுத் தொடர் முடியும் வரை அவரை விலக்காமல் வைத்திருந்த அணி பின்னர் அவரை விலக்கியது.
ஆன்டர்சனுக்கு இது சிறந்த உலககிண்ண தொடர் இல்லை. ஆனால் அவரால் இலகுவாக ஆட்டமிழக்கச்செய்ய முடியும் என அவர் கருதும் ஓரு வீரர் இருந்தால் அது திரிமானவே. அவரை ஆன்டர்சன் பத்து தடவைகள் இதுவரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

நியுசிலாந்து அணியின் டிம் சவுத்தி இங்கிலாந்தை ஓன்பது நாட்களுக்கு முன்னர் மண் கவ்வச்செய்த வெலிங்டன் மைதானத்தில் ஆன்டர்சன் தனது முதல் பந்தை வீச ஒடிவந்து வேளை பதட்டத்துடன் காணப்பட்டார் திரிமானே, இடுப்புயரத்திற்கு வந்த பந்தை இடதுதிசையில் தட்டிவிட்டார்.

அதன் பின்னர் அவர் ஆன்டர்சனை பார்த்துஅச்சப்படவில்லை.மிகச்சிறப்பாக அவரது பந்துகளை தடுத்தாடினார்.நான்கு பந்துகளை அவ்வாறு விiயாடினார்,பின்னர் ஆன்டர்சன் லெக்சைட்டிற்கு வெளியே வீசுவதற்காக காத்திருந்தவர் அவரை தட்டி விட்டு ஒரு ஓட்டத்தினை பெற்றார்.
ஆன்டர்சன் மூன்றாவது ஓவரை வீச ஆரம்பித்த வேளை திரிமானே அவரை எதிர்கொண்டார்.மிக அழகாக டிரைவ்செய்தார்,தனது முதலாவது நான்கு ஓட்டங்களை பெற்றார்.மீண்டும் நம்பிக்கை துளிர்க்கத்தொடங்கியது.இதற்கு இரண்டு பந்துகளுக்கு பின்னர் ஆன்டர்சனை உயரத்தூக்கியடித்து இரு ஓட்டங்களை பெற்றார்.&MaxW=640&imageVersion=default&AR-150309977

அடுத்த ஓவரிலும் இரு ஓட்டங்களை ஆன்டர்சனின் பந்து வீச்சில் பெற்றார். ஆன்டர்சனின் 5வது ஓவரிலேயே உண்மையான மோதல் ஆரம்பமானது.அவர் இடது கைதுடுப்பாட்ட வீரருக்கு அரவுண்ட் த விக்கட் வீசினார்,பல தடவைகள் அவர் இடது கைதுடுப்பாட்ட வீரர்களுக்கு அவ்வாறு பந்து வீசி அவர்களை எல்பி. டபில்யூ முறையில் ஆட்டமிழக்கச்செய்துள்ளார் எனினும் நான்க ஓவர்களே வீசியுள்ள நிலையில் தான் பந்து வீசும் கோணத்தை மாற்றவேண்டிய நிiலைக்கு அவர் தள்ளப்பட்டார்.ஆடுகளம் அவரிற்கு ஒத்துழைக்கவில்லை, ஆன்டர்சன் பொறுமையிழக்க தொடங்கினார்.

முதலாவது பந்து அகலப்பந்தாக வீசப்பட்டது.திரிமானே அழகாக அதை கவர் டிரைவ் செய்து நான்கு ஓட்டங்களை பெற்றார்.நிலைமை மாறத்தொடங்கியது.ஆன்டர்சன் நெருக்கடிக்குள்ளாகியிருந்தார், திரிமானே அவரை தனது வலைக்குள் சிக்கவைத்தார்.

இதற்கு நான்கு பந்துகளிற்கு பின்னர் இன்னொரு டிரைவ், இது முன்னதை விட சற்று துணிச்சலானது பந்து துடுப்பின் நடுப்பகுதியில் பட்டு எல்லைக்கோட்டிற்கு விரைந்தது. தான் அடித்த அந்த சொட்டை அவரே வியந்ததை காண முடிந்தது.இலங்கை கொடிகள் உயர எழும்ப தொடங்கின,திரிமானே ஆன்டர்சனுடனான மோதலில் வெல்ல தொடங்கினார்.

2633548300000578-2974094-image-a-77_1425197778832

10 ஓட்டங்களை கொடுத்த அந்த ஓவரிற்கு பின்னர் அவர் மீண்டும் பவர்பிளே ஓவர்களிலேயே பந்து வீச வந்தார். கிட்டத்தட்ட திரிமானேயை ஆட்டமிழக்கச்செய்தார். எனினும் திரிமானே அவ்வேளை 98 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

2016 இல் இலங்கை அணி மீண்டும் இங்கிலாந்திற்கு செல்லும்போது திரிமானே நிச்சயம் ஆன்டர்சனை எதிர்கொள்வார்.எனினும் அவர் தற்போது ஆன்டர்சனிற்கு எதிராக சதத்தை பெற்றுள்ளார். உலககிண்ணப்போட்டிகளில் இலங்கைக்காக சிறிய வயதில் சதமடித்த வீரர் அவராக மாறியுள்ளார்.

அடுத்த முறை திரிமானே ஆன்டர்சனை எதிர்கொள்ளும்போது இரசிகர்கள் இன்றைய போட்டியை நினைவில் வைத்திருப்பார்கள்.