செய்திகள்

ஆப்கானின் முதல் உலககிண்ண வெற்றி

நாங்கள் எங்கள் எங்கு சென்றாலும்
நாங்கள் யார் என கேட்கிறார்கள்
எங்கிருந்து வந்தோம் என கேட்கிறார்கள்
நாங்கள் மிகப்பலம் பொருந்திய ஆப்கானிஸ்தான் மக்கள் என சொல்கிறோம்

CRICKET-WC-2015-AFG-SCO

 ஸ்கொட்லாந்துடனான இன்றை போட்டி முழுவதும் ஆப்கான் இரசிகர்கள் பாடிய பாடல் இது.

இன்றை போட்டியை பார்ப்பதற்காக அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தில் வசிக்கும் சிறிய எண்ணிக்கையான ஆப்கான் இரசிகர்கள் வந்திருந்தனர். இவர்களில் ஒருவர் 2000 ம் ஆண்டு அந்த நாட்டிலிருந்து வெளியேறி நியுசிலாந்தில் தஞ்சம்புகுந்தவர்.அவர் இன்றைய போட்டியை பார்ப்பதற்காகதனது குடும்பத்தினருடன் வந்திருந்தார்,தங்கள் வீரர்கள் தனிமையை உணரக்கூடாது என்பதற்காக அவர் வந்திருந்தார்.

33 ஓவரில் ஆப்கான் அணி ஓரு விக்கெட்டை வீழத்தியபோது முதலில் இந்த பாடல்பாடப்பட்டது.பின்னர் அந்த பாடல் இன்னமும் வலுவாக பாடப்பட்டது, நான்கு மணித்தியாலங்களுக்கு பின்னர் ஆப்கான் தனது வெற்றிக்கனியை சுவைத்தவேளை அந்த பாடல் உச்சத்தைதொட்டது. ஆப்கானிஸ்தான் போன்று முதலாவது உலககிண்ணத்தை விளையாடும் அணிக்கு பல விடயங்கள் நெருக்கடியை தரலாம், -சுவிங், பவுன்ஸ்,எதிரணியின் தரம், வெளிநாட்டில் விளையாடுவது,  எனினும் தனது முதலாவது போட்டியை பங்களாதேசிற்கு எதிராக அவர்கள்மிகச்சிறப்பாகவே ஆரம்பித்தனர், இலங்கைக்கு எதிராக அபாரமாக விளையாடினர். எனினும் இன்றை நாள் தங்களுக்கு மிகப்பெரும் நாள் என அவர்கள் கருதினர்.  ஆப்கான் அரசிகர்களும் அவ்வாறே கருதினர்.

எனினும் 85ற்கு 2 விக்கெட்களை இழந்திருந்த நிலையிலிருந்து 97 ஓட்டங்களுக்கு ஏழு விக்கெட்களை அவர்கள் இழந்தவேளை வெற்றிபெறுவதற்கு இன்னமும் 114 ஓட்டங்கள் தேவைப்பட்டன. நம்பிக்கையற்ற நிலை காணப்பட்டது.

அடுத்த சில ஓவர்களுக்கு ஆப்கான் இரசிகர்கள் தங்கள் இருப்பை வெளிப்படுத்தினர், அது களத்தில் நின்ற துடுப்பாட்ட வீரர்களுக்கு உதவியிருக்கவேண்டும்.

சென்வரியும் தவ்லட்டும் அதன் பின்னர் விக்கெட் இழப்பதை தவிர்க்க முனைந்தனர்.நிதானமாக ஆடினர்.அடுத்த ஆறு ஓவர்களில் 10 ஓட்டங்களே பெறப்பட்டன,தவ்லட் மோசமான சொட்டிற்கு ஆட்டமிழந்த வேளையும் ஆப்கான் கொடி தொடர்ந்தும் பறந்துகொண்டிருந்தது.

39 ஓவரில் சென்வரி ஒரு சிக்சரும். பவுண்டரியும் அடித்தார் ஆப்கான் மீண்டும் வெற்றியை துரத்த முனைவதை வெளிப்படுத்தினார். 47 ஓவரில் அவர் மேலும் மூன்று சிக்சர்களை அடித்தார்.அவர் அந்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார்,ஆனால் ஏயை ஆட்டக்காரர்கள் உலககிண்ணத்தின் ஆப்கானிற்கான முதலாது வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

207023

வெற்றிக்கான ஒரு ஓட்டத்தைபெற்றபின்னர் சபூர் மிட்விக்கெட் திசையை நோக்கி ஓட ஆப்கான் இரசிகர்களும் அந்த திசையை நோக்கி ஓடினர்.அவர்கள் பாடல் அவ்வேளை விண்ணை தொட்டது.அவ்வேளை கந்தகாரில் இருப்பது போன்ற உணர்வு தோன்றியது.