செய்திகள்

ஆப்கானில் சட்ட-மா அதிபர் திணைக்களத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்

ஆப்கானிஸ்தானின் வடபகுதியிலுள்ள பால்க் பிராந்தியத்தின் சட்ட-மா- அதிபர் திணைக்கள அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள்மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இராணுவசீருடையில் நுழைந்த தீவிரவாதிகளே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்ககளுடன் நால்வர் சட்ட-மா- அதிபர் திணைக்களத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் சட்ட-மா- அதிபர் திணைக்களத்திற்குள்ளேயே உள்ளதாகவும். ஆப்கான் பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றிவளைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவர் கொல்லப்பட்டடுள்ளதாகவும், 20ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆளுநர் மாளிகையிலிருந்து 200 தொலைவில்உள்ள சட்டமா அதிபர் திணைக்கள த்தில் இடம்பெற்றுள்ள இந்த தாக்குதலின் போது சட்டமா அதிபர் அங்கிருந்தாரா என்பது தெரியவரவில்லை.