செய்திகள்

ஆப்கானில் தீவிரமாக உறுப்பினர்களை சேர்த்துவரும் ஐஎஸ்

ஐஎஸ் அமைப்பு ஆப்கானிஸ்தானில் தீவிரமாக உறுப்பினர்களை இணைத்து வருவதாகவும் எனினும் அங்கு அந்த அமைப்பு இன்னமும் செயற்பட தொடங்கவில்லை எனவும் அங்குள்ள சர்வதேச படைகளின் தளபதி தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்பின் சமூக ஊடக பிரச்சாரங்கள் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானை சேர்ந்தவர்களை அந்த அமைப்பு நோக்கி ஈர்த்துவருவதாக பன்னாட்டு படைகளின் தளபதி ஜெனரல் ஜோன் எவ் கம்பல் தெரிவித்துள்ளார்.
மேலும் தலிபான் தீவிரவாதிகளும் இந்த அமைப்பில் இணைகின்றனர் , அந்த அமைப்பிற்கு தங்களது ஆதரவை தெரிவிக்கின்றனர். இது நிச்சயமாக கவலையளிக்கும் விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆறு மாத கால பகுதியில் ஆப்கானில் ஐஎஸ் அமைப்பின் பிரசன்னம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.