செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தளபதி பலி

ஆப்கானிஸ்தானில் நேட்டோ மேற்கொண்ட ஆளில்லாத விமானத்தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு தனது ஆதரவை சமீபத்தில் வெளியிட்டிருந்த தலிபான் தளபதி முல்லா அப்துல்லா ரவுவ் கொல்லப்பட்டுள்ளார்.
ஹெல்மன்ட் மாகாணத்தின் தலைமை பொலிஸ் அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தலிபானிலிருந்து விலகிய குறி;ப்பிட்ட தளபதி ஐஎஸ்எஸ் அமைப்பிற்கு தனது ஆதரவை வெளியிட்டிருந்தார்.
பாலைவனப்பகுதியொன்றில் ஆறு பேருடன் சென்றுகொண்டிருந்த கார் வெடித்துச்சிதறியதாக ஆப்கானிஸ்தானின் பழங்குடி இனத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வாகனத்தில் குறிப்பிட்ட தளபதியுடன் அவரது உறவினர் ஒருவரும், நான்கு பாக்கிஸ்தானியர்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட தலைவரை ஐஎஸ்எஸ் அமைப்பு பிராந்தியமொன்றிற்கு பொறுப்பாக நியமித்திருந்ததாகவும்,நேட்டோவின் புதிய ஆணையின் இடம்பெற்றுள்ள முதலாவது தாக்குதல் இதுவெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.