செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் 3700 பொதுமக்கள் பலி

கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் 2014 ம் ஆண்டிலேயே ஆப்கானிஸ்தானில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிபரத்தை ஐக்கிய நாடுகள் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ தனது மோதல் நடவடிக்கைகளை முடித்துக்கொண்டுள்ளது,அமெரிக்காவின் நீண்ட கால யுத்தம் முடிவிற்கு வருவதாக ஓபாமா அறிவித்துள்ளார்,எனினும் ஆப்கானிஸ்தானில் மோதல்கள் தீவிரமடைகின்றன என ஐ.நா குறிப்பிட்டுள்ளது.
2014 இல் 3669 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்,2009 இற்கு பின்னர் இதுவே அதிகூடிய உயிரிழப்பு,6849 பேர் காயமடைந்துள்ளனர்.2013 ம் ஆண்டை விட ஓட்டுமொத்தத்தில் 23 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.என ஐ.நா தெரிவித்துள்ளது.
இவர்களில் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்,714 பேர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 1760 பேர் காயமடைந்துள்ளனர். இது 2013ம் ஆண்டை விட 40 வீதம் அதிகமாகும்,298 பெண்கள் கொல்லப்பட்டு 711 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசபடைகளுக்கும் தலிபானிற்கும் இடையிலான மோதல்கள் அதிகரிப்பே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிற்கான யுத்தம் இன்னமும் முடிவடையவில்லை, அது உருமாறியுள்ளது,சர்வதேச படையினர் விலகிக்கொண்டுள்ள நிலையில் கிளர்ச்சிக்காரர்கள் மீண்டும் தாக்குதல்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்,இவர்கள்கண்மூடித்தனமான ஆயுத பாவனையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட 70 வீதமான உயிரிழப்புகளுக்கு தீவிரவாதிகளே காரணம்,15 வீதம் அரசபடைகளும் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.