செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 19 தொழிலாளர்கள் மீட்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசுக்கு எதிரான வன்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஹக்கானி அமைப்பும் ஆட் கடத்தல், கொலை செய்தல் போன்ற நாசவேலைகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பக்தியா மாகாணத்தில் வேலை செய்து கொண்டு இருந்த அப்பாவி சுரங்கத் தொழிலாளர்கள் 19 பேரை கடந்த 19-ந் தேதி ஹக்கானி தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர். இவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டது.

இதனையடுத்து உள்ளூர் தலைவர்களின் உதவியோடு கடத்தப்பட்ட 19 தொழிலாளர்களும் நேற்றுமுன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனை ஆப்கானிஸ்தான் ராணுவம் உறுதிபடுத்தி உள்ளது.