செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மத பண்டிதர்கள், பெண்கள் என 33 பேர் படுகொலை; தலிபான்கள் வெறிச்செயல்

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் செயல்பட்டு வந்த அமெரிக்க படையினர் வாபஸ் பெறப்பட்டு வருகின்றனர். இதனால், பல்வேறு பகுதிகளையும் தலிபான்கள் சிறை பிடித்து வருகின்றனர்.இந்த நிலையில், தலிபான் பயங்கரவாதிகள் சிறை பிடித்த பகுதிகளில் உள்ள 33 பேரை படுகொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளது. அவர்களில் மத பண்டிதர்கள், மூத்த பழங்குடியினர், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை பாதுகாவர்கள் மற்றும் பெண் பத்திரிகையாளர்கள் ஆகியோரும் உள்ளனர்.இதேபோன்று மாகாண அரசு அதிகாரிகள், போலீசார் மற்றும் ராணுவத்தினரின் குடும்ப உறவினர்களையும் சிறை பிடித்து அவர்களை தலீபான்கள் கொன்று உள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தியும் வெளிவந்துள்ளது.(15)