செய்திகள்

ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக பறவைகள் தற்கொலைப் படை: புதிய பாணியில் தாக்குதல் முயற்சி

ஆப்கானிஸ்தானில் இதுவரை மனித வெடிகுண்டுகளை பயன் படுத்தி வந்த தலிபான்கள் தற்போது பறவைகளை தற்கொலைப் படையாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பில் கிடைத்துள்ள தகவல்கள் ஆப்கான் அரசுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில நாள்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் பார்யப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு பறவை பறந்தது. அந்தப் பறவையை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். படுகாயங்களுடன் கீழே விழுந்த பறவையை பாதுகாப்புப் படை யினர் சோதனை செய்தனர். அப் போது அந்த காட்டுப் பறவை யின் தலையில் ஜிபிஎஸ் கருவி, சிறிய ரக கேமரா ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன.

அந்த பறவையின் இறகுகளில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்பாகவே பாதுகாப்புப் படையினர் பறவையை சுட்டு வீழ்த்திவிட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் போலீஸ் மூத்த அதிகாரி அகமதுல்லா கூறியபோது, தலிபான் தீவிரவாதிகள் இதற்கு முன்பு கழுதைகளை தற்கொலைப் படையாக பயன்படுத்தியுள்ளனர்.

இப்போது முதல்முறையாக பறவை மூலம் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர், இதேபோல் ஏராளமான பறவை களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு புதிய தற்கொலைப் படையை உருவாக்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். தலிபான் தீவிரவாதிகளின் இந்த புதிய தாக்குதல் முறை ஆப்கானிஸ்தானில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.