செய்திகள்

ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விமான தாக்குதல்: 23 தீவிரவாதிகள் சாவு

அமைதியற்று காணப்படும் பழங்கியினர் அதிக அளவில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் விமான தாக்குதல் நடத்தினார்கள். இதில் 23 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் கைபர் மற்றும் வடக்கு வர்சிஸ்தான் பகுதியில் நடத்தினார்கள்.

பாகிஸ்தான் தலிபான்கள் மற்றும் லஸ்கர்-இ-இஸ்லாம் தீவிரவாதிகள் பெருமளவில் இப்பகுதியில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ராணுவத்தினர் இவர்களை களையெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ராணுவ நடவடிக்கையில் 2018 முக்கிய தீவிரவாதிகள் உள்பட 2700 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள ராணுவம், 347 வீரர்களையும் இழந்துள்ளதாக கூறியுள்ளது.