செய்திகள்

ஆப்கானிஸ்தான் நடாளுமன்ற தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி

நேற்றைய தினம் தலீபான் தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இழிவான மற்றும் கோழைத்தனமான செயலாகும். ஜனநாயகத்தில் இதுபோன்ற தாக்குதலுக்கு இடமே கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நேரத்தில், நாம் ஆப்கானிஸ்தான் மக்களின் தோளோடு தோளாக நிற்போம் என்று கூறியுள்ளார்.