செய்திகள்

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 6 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. இதில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நாடாளூமன்றத்திற்கு விரைந்துள்ளனர்.

துப்பாகிச் சண்டை தொடர்ந்து நடைபெற்றதால் உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறினர். நாடாளுமன்ற அவை முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது.

மேலும் இந்த சம்பவம் குறித்து உள்ளூர் செய்தி சேனல் வெளியிட்டுள்ள செய்தியில் குண்டு வெடிப்பில் 5 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 21 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மதத்தலைவர், ரம்ஜான் மாதத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தக்கூட்டது என தலிபான்கள் அமைப்புக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் அதை மீறி கார் குண்டுகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் அறிமுகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

1212

 

01