செய்திகள்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைகளில் தாலிபான்களின் கொடி

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைகளில் தாலிபான்கள் தமது கொடியை ஏற்றியுள்ளனர்.

கந்தஹார் அருகே இருக்கும் ஸ்பின் போல்டாக் எனும் எல்லைச் சாவடி அருகே வெள்ளை நிறக் கொடிகயை ஏந்திக்கொண்டு தாலிபன் உறுப்பினர் ஒருவர் ஆட்டுவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

எல்லையின் மறுபுறம் இருக்கும் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் ஸ்பின் போல்டாக் எல்லைச் சாவடியை கைப்பற்றியுள்ள தாலிபன் தீவிரவாதிகள் உரையாடிக் கொண்டிருக்கும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் படையினரிடமிருந்து எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் தாலிபன்கள் இந்த எல்லைச் சாவடியைக் கைப்பற்றியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

20 வருடங்களாக அங்கு இருந்த அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபன் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு உதவியாக இருந்த மொழிபெயர்ப்பாளர்கள் ஆபத்து இருப்பதாக கூறப்படுகின்றது.

இதனால் அவர்களை மீட்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது.
இம்மாத இறுதி வாரத்தில் இதற்கான “Operation Allies Refuge” என்ற மீட்பு நடவடிக்கை தொடங்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.