செய்திகள்

ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவை மிரட்ட வரும் அனல் காற்று

பயங்கர அனல் காற்று தொகுதி ஒன்று ஆப்பிரிக்காவில் இருந்து மேற்கு ஐரோப்பாவை நோக்கி நகர்ந்து வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் கடும் வெயில் வாட்டியெடுக்கும் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதன்படி 7-ந்தேதி பிரான்சில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கும், மறுநாள் ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 44 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெயில் கொளுத்தும் என முன்னறிவிப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனவே இந்த வெப்பத்தை சமாளிப்பதற்காக இந்த நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்காக குறிப்பாக வயதானவர்களுக்காக குளிரூட்டப்பட்ட திறந்தவெளி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய அனல் காற்றால் ஏற்படும் வெப்பநிலை, கடந்த 2003-ம் ஆண்டு இந்த நாடுகளில் நிலவிய வெப்பத்தை விட அதிகமாக இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த நாடுகளில் அப்போது நிலவிய பயங்கர வெப்பத்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.