செய்திகள்

ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க சம்பள நிர்ணய சபை இறுதி முடிவெடுத்தது: பெருந்தோட்டக் கம்பனிகள் எதிர்ப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு சம்பள நிர்ணய சபையில் இன்று இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

900 ரூபா அடிப்படை சம்பளம் மற்றும் 100 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அடங்கலாக ஆயிரம் ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு சம்பள நிர்ணய சபை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

ஆனாலும் தொழிற்சங்கங்கள் இந்த சம்பளத்தை வழங்க வேண்டுமென்று உறுதியான நிலைப்பாட்டில் இருந்ததால் தொழில் ஆணையாளர் அந்த சம்பளத்தை வழங்க வேண்டுமென்று இறுதித் தீர்மானம் எடுத்ததுடன் அது தொடர்பான வர்த்தமானியை வெளியிட நடவடிக்கையெடுப்பதாகவும் அறிவித்துள்ளார். -(3)