செய்திகள்

ஆரோக்கியமான வகையில் பேச்சுக்களை தொடர இணக்கம்: முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்பு இன்று சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான முக்கிய பேச்சுக்கள் இன்று கொழும்பில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது, ஆரோக்கியமான முறையில் எதிர்காலத்தில் பேச்சுக்களைத் தொடர்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவில் மாவை சேனாதிரஜா, எம்.ஏ.சுமந்திரன் உட்பட முக்கியஸ்த்தர்கள் இடம்பெற்றிருந்தார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீம், கட்சிப் பொதுச் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பேச்சுக்களில் பங்குகொண்டனர்.

ஆரோக்கியமான வகையில் இணக்கப்பாட்டுடன் பேச்சுக்களைத் தொடர்வதற்கும், கிழக்கு மாகாண நிலைமைகளை அவதானித்து முக்கியமாக மக்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்வதற்கும் இன்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.