ஆர்ப்பாட்டத்தில் பிடிக்கப்பட்ட சிங்கக்கொடி விவகாரம் : டலஸ் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார்
கொழும்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது பிடிக்கப்பட்ட பிழையான சிங்கக்கொடிகள் தொடர்பாக சிறுபான்மை மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அந்த சிங்கக்கொடி மாற்றப்பட்டது என நான் அறிந்திருக்கவில்லை அங்கு யாரோ ஒரு குழு அந்த கொடியை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் நான் அறியாமல் அதனை கையில் எடுத்துள்ளேன். இந்த கோடி விடயத்தில் எதேனும் இனத்தின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் இதுபோல் இனி எந்த சம்பவமும் இடம்பெறாத வகையில்செயற்படுவோம். என அவர் தெரிவித்துள்ளார்.