ஆர்ப்பாட்டத்தையடுத்து கழிவுகளை மண் போட்டு முடியுள்ளனர் ( படங்கள்)
அட்டன் நோட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்து வனராஜா மேற்பிரிவு தோட்ட தொழிலாளிகள் இன்று காலை 8.30 மணியளவில் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்த பின் அட்டன் நோட்டன் பிரதான வீதியை மறித்து வனராஜா சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதை அறிக்கையிட்டிருந்தோம்.
அதன் பின் தோட்ட அதிகாரிகளும் அட்டன் பொலிஸாரும் இணைந்து பெக்கோ இயந்திரம் பயன்படுத்தி தற்போது கழிவுகளை மண் போட்டு மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.