செய்திகள்

ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஆதரவு: வடமாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நடைபெறும் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதில் கலந்துகொள்ளும் முகமாக வடக்குமாகாண சபை அமர்வு முற்பகல் 11.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு சபை அமர்வு ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளை முற்பகல் 11.30 வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார். இதனையடுத்து இன்றைய பேரணியில் பங்குகொள்வதற்காக உறுப்பினர்கள் அவசரமாகச் சென்றனர்.